பாகிஸ்தான் பிடியில் சிக்கிய பி.எஸ்.எப்., வீரரை மீட்க தீவிர முயற்சி

புதுடில்லி: பாகிஸ்தான் பிடியில் உள்ள பி.எஸ்.எப்., வீரர் பிகே சிங்கை மீட்க இந்திய அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
நம் நாட்டின் எல்லை பாதுகாப்புப் படையில், கான்ஸ்டபிளாக பணிபுரிபவர் பி.கே.சிங். இவர் பஞ்சாபின் பெரோஸ்பூரில், இந்திய - பாக்., எல்லையில் பணிபுரிந்து வருகிறார். இவர், பணியில் இருந்தபோது, தவறுதலாக பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஜலோக் தோனா பகுதிக்குச் சென்று ஓய்வு எடுத்தார்.
அதை நோட்டமிட்ட பாகிஸ்தான் வீரர்கள், சிங் எல்லை தாண்டி வந்ததாகக் கூறி, அவரை கைது செய்தனர். அவரை மீட்கும் பணியில் நம் ராணுவ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து இந்திய அதிகாரிகள் கூறியதாவது:
இன்று காலை கொடிக் கூட்டத்திற்கான கோரிக்கைக்கு பாகிஸ்தான் படையினர் பதில் அளிக்கவில்லை. எங்கள் அணிகள் கொடியுடன் எல்லையில் இருந்தன. அது வழக்கமான ஒன்று. ஆனால் அவர்கள் வரவில்லை. சில மணி நேரங்கள் கழித்து, அவர்கள் எல்லைக்கு வந்து ஏன் கொடிக் கூட்டத்தை அழைத்தீர்கள் என்று கேட்டார்கள்.
அவர்கள் பிடியில் உள்ள பி.எஸ்.எப்., வீரர் குறித்து கேட்டோம். இதற்கு பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் படையினர் தங்கள் உயர் அதிகாரிகளின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம் என கூறினர். இது குறித்து தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம். பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப் படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


மேலும்
-
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: ஜிப்லைன் ஆபரேட்டர் மீது சந்தேகம்!
-
தண்ணீர் தொட்டியில் 4 வயது குழந்தை பலி; மதுரை பள்ளி உரிமையாளர் கைது
-
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் பாலியல் துன்புறுத்தல்; விசாகா கமிட்டி விசாரணை
-
கனடா பார்லி தேர்தல்; காலிஸ்தான் ஆதரவு கட்சி தலைவர் படுதோல்வி!
-
போலீஸ் ஸ்டேஷனில் புகுந்த சிறுத்தை; நீலகிரியில் போலீசார் அதிர்ச்சி!
-
குஜராத்தில் சட்டவிரோதமாக இருந்த 6500 பேர்; ஆக்கிரமித்து கட்டிய வீடுகள் இடிப்பு