என்.எல்.சி., ரகசிய ஓட்டெடுப்பு தொ.மு.ச.,- -- அ.தொ.ஊ.ச.,வும் வெற்றி

நெய்வேலி : என்.எல்.சி.,யில் நடந்த ரகசிய ஓட்டெடுப்பு தேர்தலில் தொ.மு.ச., மற்றும் அ.தொ.ஊ.ச., மீண்டும் வெற்றி பெற்று என்.எல்.சி.,யின் அங்கீகாரத்தை கைப்பற்றியுள்ளனர்.
கடலுார் மாவட்டம் என்.எல்.சி.,யில் 502 பெண் ஊழியர்கள் உள்ளிட்ட 6 ஆயிரத்தி 578 நிரந்தர தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களது உரிமைகளை, பெற்றுத் தருவதற்கு தகுதியுள்ள தொழிற்சங்கம் யார் என்பதை 4 ஆண்டுகளுக்கு ஓருமுறை நடக்கும் ரகசிய ஓட்டெடுப்பில் தொழிலாளர்கள் அவர்களது ஓட்டுகள் வாயிலாக தேர்வு செய்கின்றனர்.
கடந்த 4 ஆண்டுகளாக என்.எல்.சி.,யின் அங்கீகாரம் பெற்ற சங்கங்களாக தொ.மு.ச., மற்றும் அ.தொ.ஊ.ச., இருந்தது. வரும் 2025- 2029 வரையிலான 4 ஆண்டு, சங்க அங்கீகாரத்திற்கான ரகசிய ஓட்டுப்பதிவு நேற்று காலை 5.30 மணிக்கு துவங்கியது. மாலை 5.மணிக்கு முடிவடைந்தது.
நெய்வேலி மட்டுமின்றி துாத்துக்குடி ,ராஜஸ்தான், உ.பி. ஒடிசா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் செயல்பட்டு வரும் என்.எல்.சி.,யின் விரிவாக்கங்களிலும் நேற்று தேர்தல் நடந்தது. நெய்வேலியில் நிலக்கரி சுரங்கங்கள், அனல்மின் நிலையங்கள் மற்றும் அலுவலகப்பகுதிகள் உள்ளிட்ட 11 ஓட்டுச்சாவடிகளில் நடந்த தேர்தலில் தொழிலாளர்கள் அனைவரும் ஓட்டுகளை பதிவு செய்தனர்.
என்.எல்.சி., ரகசிய ஓட்டெடுப்பில் தபால் ஓட்டுகள் உட்பட மொத்தம் 6 ஆயிரத்தி 364 ஓட்டுகள் பதிவாகியிருந்தது.
ஓட்டுப்பதிவு நேற்று மாலை 5 மணிக்கு முடிவடைந்ததும், மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்களின் பாதுகாப்புடன், மண்டல தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் ஓட்டு எண்ணும் மையத்திற்கு கொண்டு சென்றனர்.
கடலுார் எஸ்.பி., ஜெயக்குமார் நெய்வேலியில் முகாமிட்டு ஓட்டுச்சாவடிகள் மற்றும் ஓட்டு எண்ணும் மையத்தினை பார்வையிட்டார்.
நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 9ல் உள்ள என்.எல்.சி., பள்ளி வளாகத்தில், சென்னை, மத்திய மண்டல துணை முதன்மை தொழிலாளர் நல ஆணையர் சவுத்ரி முன்னிலையில் நேற்று இரவு 9.32 க்கு ஓட்டு எண்ணும் பணிகள் துவங்கியது. இந்த ஓட்டெடுப்பில் 51 சதவிகித ஓட்டுகளை பெறும் தொழிற்சங்கத்திற்கு என்.எல்.சி., யுடன் பேச்சுவார்த்தை நடத்தும் அங்கீகாரம் வழங்கப்பட உள்ளது.
ரகசிய ஓட்டெடுப்பில் போட்டியிட்ட 6 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் ஓட்டு எண்ணிக்கையின்போது உடனிருந்தனர்.
க்ஷபள்ளி வளாகத்திற்குள் மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்களும், பள்ளி வளாகத்திற்கு வெளியே நெய்வேலி டி.எஸ்.பி., ராதாகிருஷ்ணன் தலைமையிலான இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 227 தபால் ஓட்டுகள் உட்பட மொத்த 6364 பதிவானது, அதாவது, 97 சதவிகித ஓட்டுகள் பதிவாகியுள்ளது.
ரகசிய ஓட்டெடுப்பில் தொழிற்சங்கத்தினர் பெற்ற ஓட்டுகளின் விபரம்:
தொ.மு.ச., - 2507, அ.தொ.ஊ.ச., - 1389, பா.தொ.ச., - 1385, சி.ஐ.டி.யு., - 794, தி.தொ.ஊ.ச., - 231, பி.எம்.எஸ்., - 58.
இதில் 51 சதவிகிதம் ஓட்டுகளை பெற்ற தொ.மு.ச., மற்றும் அ.தொ.ஊ.ச., மீண்டும் என்.எல்.சி. அங்கீகாரத்தை கைப்பற்றுகிறது.
மேலும்
-
பட்டுக்கோட்டையில் பெண் தலை துண்டித்து கொலை; மர்ம நபர்களை தேடும் போலீசார்
-
துருக்கி அதிபர் உதவியுடன் போரை முடிவுக்கு கொண்டு வருவேன்: அதிபர் டிரம்ப் சபதம்!
-
சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் 21 பேரின் சொத்து விவரங்கள்: இணையத்தில் வெளியீடு
-
கோவில் குளத்தில் மூழ்கி 3 பேர் பலி; வேத பாராயணம் படிக்க வந்த போது சோகம்!
-
சென்னையில் 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!
-
அரசு பஸ்- பால் வேன் நேருக்கு நேர் மோதல்; நள்ளிரவில் நடந்த விபத்தில் 3 பேர் பலியான சோகம்