சிவகாசியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து; தொழிலாளிகள் 3 பேர் பலி

சிவகாசி: சிவகாசியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், தொழிலாளிகள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் தனியார் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டாசு தயாரிப்பு அறைகள் உள்ளன. 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
இந்நிலையில் இன்று (ஏப்ரல் 26) திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. மருந்து கலவையில் உராய்வு ஏற்பட்டு எதிர்பாராத விதமாக பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திலேயே மூன்று தொழிலாளர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயமடைந்தனர்.
இவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து (4)
rama adhavan - chennai,இந்தியா
26 ஏப்,2025 - 15:32 Report Abuse

0
0
Reply
சுந்தரம் விஸ்வநாதன் - coimbatore,இந்தியா
26 ஏப்,2025 - 14:58 Report Abuse

0
0
Reply
ஆரூர் ரங் - ,
26 ஏப்,2025 - 14:41 Report Abuse

0
0
Reply
எம். ஆர் - கோவை,இந்தியா
26 ஏப்,2025 - 12:49 Report Abuse

0
0
Reply
மேலும்
-
ஈரான் துறைமுகத்தில் வெடித்த மர்ம பொருள்: 400 பேர் காயம்
-
மலையகத்து மக்களை நேசித்தவர்,தாயகத்து மக்களை பூஜித்தவர்..
-
ஹரியானாவில் நெடுஞ்சாலையில் தூய்மை பணியாளர்கள் மீது மோதிய லாரி; 7 பேர் பலி; 4 பேர் கவலைக்கிடம்
-
காஷ்மீர் தாக்குதல்: ஐ.நா., பாதுகாப்பு சபை கடும் கண்டனம்
-
இந்தியர்களை பார்த்து பாக்., அதிகாரி செய்த சைகை: கொந்தளித்த நெட்டிசன்கள்!
-
பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன் இந்த கொடூரன் தான்!
Advertisement
Advertisement