காஷ்மீர் தாக்குதல்: ஐ.நா., பாதுகாப்பு சபை கடும் கண்டனம்

6




ஐக்கிய நாடுகள்: காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு ஐ.நா., பாதுகாப்பு சபை கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளது.


15 உறுப்பினர்களை கொண்ட இந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: காஷ்மீரில் கடந்த 22ம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவிக்கிறோம். இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள்,நிதியுதவி அளித்தவர்கள், உதவியவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட நாடுகள், சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்தின்படி செயல்பட வேண்டும்.


சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு பயங்கரவாதம் அனைத்து வடிவிலும் தொடர்ந்து அச்சுறுத்தலாக உள்ளது. பயங்கரவாதம் தொடர்பான எந்த செயலும் சட்டவிரோதமானது மற்றும் ஏற்றுக் கொள்ள முடியாதது. அதனை யார் செய்திருந்தாலும் சரி. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement