ஹரியானாவில் நெடுஞ்சாலையில் தூய்மை பணியாளர்கள் மீது மோதிய லாரி; 7 பேர் பலி; 4 பேர் கவலைக்கிடம்

7


சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் நெடுஞ்சாலையில் தூய்மை பணியாளர்கள் மீது லாரி மோதி ஏற்பட்ட விபத்தில், 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


டில்லி, மும்பை இடையே தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த நெடுஞ்சாலையில், ஹரியானா மாநிலத்தில் உள்ள நூஹ் மாவட்டத்தில் இன்று தூய்மைப்பணியாளர்கள் 10க்கும் மேற்பட்டோர் தூய்மை பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது நெடுஞ்சாலையில் வேகமாக வந்த லாரி தூய்மை பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஊழியர்கள் மீது மோதியது.


தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர். இந்த விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் பலத்த காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். தூய்மை பணி செய்து கொண்டிருந்தபோது, 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement