இந்தியர்களை பார்த்து பாக்., அதிகாரி செய்த சைகை: கொந்தளித்த நெட்டிசன்கள்!

22


லண்டன்: லண்டனில் அமைதிப் போராட்டம் நடத்திய இந்தியர்களை நோக்கி பாகிஸ்தான் அதிகாரி செய்த சைகை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு வெளியே இந்திய வம்சாவளினர் அமைதியான போராட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


போராட்டக்காரர்கள் இந்தியக் கொடிகளை தூக்கி, பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை எதிர்த்து முழக்கமிட்டனர். அப்போது பாகிஸ்தான் ராணுவ அதிகாரி தைமூர் ரஹத் என்பவர் போராட்டக்காரர்களை கழுத்தை அறுத்துவிடுவேன் என்பது போல சைகை செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


இந்த வீடியோ இணையத்தில் விவாதத்தை கிளப்பி உள்ளது. காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் நடந்த சில நாட்களில் பாகிஸ்தான் அதிகாரி சைகை எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் இருக்கிறது என்று இணையத்தில் நெட்டிசன்கள் திட்டி தீர்த்து வருகின்றனர்.


ஒரு சிலர் பாகிஸ்தானால் வேறு என்ன செய்ய முடியும்? உங்கள் தலைக்கு மேல் ஒரு பேரழிவு சுழன்று கொண்டிருக்கிறது என கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement