எங்கும், எப்போதும் அலட்சியப் போக்குடனே செயல்படும் தமிழக அரசு: இ.பி.எஸ்., சாடல்

1

சென்னை: ஸ்டாலின் மாடல் தி.மு.க., ஆட்சியில் கோவில் திருவிழாக்களில் உரிய நெறிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ்., குற்றம்சாட்டி உள்ளார்.



இதுகுறித்து அவரது அறிக்கை:


சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் கோவில் திருவிழாவின் போது ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.


உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.


ஸ்டாலின் மாடல் தி.மு.க., ஆட்சியில், கோவில் திருவிழாக்களில் உரிய நெறிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என்பதாலும் ,முறையான பாதுகாப்பும் கொடுப்பதில்லை என்பதாலும் இதுபோன்ற விபத்துகள் தொடர்கதையாகி விட்டது.


எங்கும், எப்போதும் அலட்சியப் போக்குடனே செயல்படும் தி.மு.க., அரசுக்கு எனது கண்டனம். உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கான நிவாரண நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும்; இனி இதுபோன்ற விபத்துகள் நிகழாவண்ணம் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுவதற்கு உரிய ஆவன செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.


இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறி உள்ளார்.

Advertisement