பிரீமியர் லீக் கிரிக்கெட்: பஞ்சாப் அணி 201 ரன்கள் குவிப்பு

கோல்கட்டா: பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் கோல்கட்டா அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 20 ஓவரில் 201 ரன்கள் எடுத்துள்ளது.

பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் 44வது லீக் போட்டி மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் நடக்கிறது. இப்போட்டியில் கோல்கட்டா மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

சிறந்த துவக்கம்



முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணிக்கு சிறந்த துவக்கம் கிடைத்தது. அந்த அணி, 6 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 56 ரன்கள் எடுத்தது. துவக்க வீரர் பிரியான்ஸ் ஆர்யா, 27 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார். இதனால், அந்த அணி ரன்கள் உயர்ந்தது. 11 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 105 ரன்கள் எடுத்தது.

ரசலுக்கு முதல் விக்கெட்



பிரியான்ஸ் ஆர்யா 35 பந்துகளில் 69 ரன் எடுத்து அண்ட்ரே ரசல் பந்தில் ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்க வீரர் பிரப்சிம்ரன் சிங், 38 பந்தில் அரைசதம் அடித்தார். இவர், 49 பந்தில் 83 ரன்களில் ஆட்டமிழந்தார். கிளென் மேக்ஸ்வேல் 8 பந்துகளில் 7 ரன்களுக்கும், மார்கோ ஜெனசன் 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பஞ்சாப் அணி, 20 ஓவரில், 4 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்தது. ஸ்ரேயாஸ் ஐயர் 25, ஜோஸ் இங்லீஸ் 11 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

இதன் மூலம் கோல்கட்டா அணிக்கு 202 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

Advertisement