நிபந்தனை இல்லாமல் உக்ரைனுடன் பேச தயார்: புடின்

2

மாஸ்கோ: உக்ரைனுடன் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாக ரஷ்யா அதிபர் புடின் கூறியுள்ளார்.

ரஷ்யா - உக்ரைன் இடையிலான போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். ரஷ்ய அதிபர் புடினுடன் தொலைபேசியில் பேசிய டிரம்ப், வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார்.

இந்நிலையில் போரை நிறுத்துவதற்காக டிரம்ப்பின் தூதராக செயல்படும் விட்காப், மாஸ்கோவில் கிரெம்ளின் மாளிகையில் புடினை சந்தித்து பேசினார்.

இது தொடர்பாக ரஷ்ய அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியதாவது; உக்ரைனுடன் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாக விட்காப்பிடம் புடின் கூறினார். இதனை பல முறை புடின் கூறியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

டிரம்ப் கண்டனம்



இந்நிலையில், ரோம் சென்ற அமெரிக்க அதிபர் டிரம்ப்பை, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

Latest Tamil News

இதன் பின்னர் டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மக்கள் வசிக்கும் பகுதிகள், நகரங்கள் மீது ஏவுகணை வீசி ரஷ்யா தாக்குதல் நடத்துவதில் எந்த பலனும் இல்லை. இது, போரை நிறுத்த அவர் விரும்பவில்லை என எண்ணத் தோணுகிறது. அவரை இன்னும் பொருளாதார தடை மூலம் வேறு வகையில் கையாள வேண்டும். ஏராளமான அப்பாவி மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.

வட கொரிய வீரர்கள்



இந்நிலையில், உக்ரைனுக்கு எதிரான போரில், ரஷ்யா உடன் இணைந்து வட கொரிய வீரர்கள் சண்டையிட்டதாக ரஷ்ய ஆயுதப்படைகளின் தலைவர் வலேரி கெராசிமோவ் கூறியுள்ளார்.

Advertisement