தக்க பதிலடி உண்டு!

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கோழைத்தனமான தாக்குதலால், நாடு முழுதும் உள்ள மக்கள் கோபத்தில் உள்ளனர். இந்த தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வலுவான பதிலடி கொடுப்பார் என, அவர்கள் நம்புகின்றனர். மக்களின் நம்பிக்கையை பிரதமர் நிறைவேற்றுவார்.
நட்டா, மத்திய அமைச்சர், பா.ஜ.,
வருமான தேக்க நிலை!
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதலின் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மக்கள் மீளவில்லை. அதே சமயம், நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் மற்றொரு பிரச்னையை பற்றியும் பேச வேண்டிஉள்ளது. மக்களின் வாங்கும் திறன் குறைந்து உள்ளதாக சமீபத்தில் வெளியாகியுள்ள தகவல் கவலை அளிக்கிறது.
ஜெய்ராம் ரமேஷ், பொதுச் செயலர், காங்கிரஸ்
மனித குலத்துக்கு எதிரிகள்!
காஷ்மீரில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் மதத்தை தங்கள் கேடயமாக பயன்படுத்தி உள்ளனர். இவர்கள் மனித குலத்திற்கும், அவர்களது மதத்திற்கும் எதிரிகள். இவர்களின் இந்த காட்டுமிராண்டித் தனத்திற்கு இந்தியா வலுவான பதிலடியை தரும்.
முக்தர் அப்பாஸ் நக்வி, மூத்த தலைவர் பா.ஜ.,
மேலும்
-
ஈரான் துறைமுகத்தில் வெடி விபத்து; பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
-
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்; மத்திய அரசு நடவடிக்கைக்கு காங்கிரஸ் முதல்வர்கள் ஆதரவும், எதிர்ப்பும்!
-
இந்தியாவுக்கு நேசக்கரம் நீட்டும் நாடுகள்; பதற்றத்தில் உளறும் பாகிஸ்தான்
-
சீறிப்பாயும் காளைகள்; கோவையில் ஜல்லிக்கட்டு துவக்கம்
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
துணை முதல்வர் உதயநிதி பெயரை சொல்லி கோவையில் தி.மு.க.,வினர் வசூல் வேட்டை