சீறிப்பாயும் காளைகள்; கோவையில் ஜல்லிக்கட்டு துவக்கம்

கோவை: கோவையில் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக தொடங்கியுள்ளது. ஏராளமான மாடுபிடி வீரர்கள் பங்கேற்று உள்ளனர்.


கோவை எல்.அன்டி சாலையில் தமிழர் பண்பாட்டு ஜல்லிக்கட்டு பேரவை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்தும் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் செந்தில்பாலாஜி துவக்கி வைத்தார். கலெக்டர் பவன் குமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஜல்லிக்கட்டு போட்டியில், அமைச்சர் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். 800 க்கும் மேற்பட்ட காளைகள் களம் இறங்க உள்ளது. முதல்காளையாக கோவை வரதராஜ பெருமாள் கோவில் காளை களம் இறங்கியது.




முதல்வர் சார்பில், சிறந்த மாடுபிடி வீரருக்கு ஒரு காரும், யாரும் பிடிக்கப்படாத காளைக்கு துணைமுதல்வர் சார்பில் ஒரு காரும் பரிசு வழங்கப்பட உள்ளது. இதுதவிர அனைவருக்கும் பரிசு மழை பொழிந்து வருகின்றது. தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகின்றது.

Advertisement