செயற்கை நுாலிழை வரிவிலக்கு நீட்டிப்பு திருப்பூர் ஆடை ஏற்றுமதி உயர வாய்ப்பு

திருப்பூர்:செயற்கை நுாலிழை பின்னல் துணி இறக்குமதிக்கான வரிவிலக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், செயற்கை நுாலிழை ஆடை ஏற்றுமதி மேலும் அதிகரிக்குமென, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துஉள்ளனர்.

சர்வதேச ஜவுளி சந்தையில், செயற்கை நுாலிழை ஆடைகள் பங்களிப்பு அதிகம். நம் நாட்டில், சில நிறுவனங்கள் மட்டுமே, செயற்கை நுாலிழை துணி உற்பத்தி செய்கின்றன.

இதனால், சீனா, வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்து, மலிவு விலையில் துணி இறக்குமதி செய்யப்படுகிறது. உள்நாட்டு துணி உற்பத்தியாளர் பாதிப்படையக் கூடாது என்பதால், செயற்கை நுாலிழை துணி இறக்குமதிக்கு, அரசு கட்டுப்பாடு விதித்தது.

மதிப்பு கூட்டப்பட்ட ஆடை ஏற்றுமதி அதிகரிக்க, மறு ஏற்றுமதி நிபந்தனையுடன், துணி இறக்குமதிக்கு சிறப்பு வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. குறிப்பாக, ஒரு கிலோ, ஏறத்தாழ 300 ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள செயற்கை பின்னல் துணி இறக்குமதிக்கு வரிவிலக்கு என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறைவான மதிப்புள்ள துணி இறக்குமதி செய்தால், 20 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.

மத்திய வர்த்தகத்துறையின், வெளிநாட்டு வர்த்தக பிரிவில், ஏற்றுமதியாளர்கள், 'அட்வான்ஸ் லைசென்ஸ்' பெற்று, வரி விலக்குடன், துணி இறக்குமதி செய்யலாம். அடுத்த ஆறு மாதங்களுக்குள், இறக்குமதி மதிப்பில் இருந்து, 35 சதவீதம் கூடுதல் மதிப்பில், ஆயத்த ஆடைகளாக ஏற்றுமதி செய்ய வேண்டும் என்பதே பிரதான நிபந்தனை.

குறைந்தபட்ச துணி இறக்குமதிக்கான வரிவிலக்கு சலுகையை, மத்திய அரசு, மேலும் ஓராண்டுக்கு நீட்டித்துள்ளது. இதன் மூலம், செயற்கை நுாலிழை ஆடை ஏற்றுமதி கணிசமாக உயருமென, ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துஉள்ளனர்.

குறைந்தபட்ச துணி இறக்குமதிக்கான வரிவிலக்கு சலுகையை, மத்திய அரசு, மேலும் ஓராண்டுக்கு நீட்டித்துள்ளது. இதன் மூலம், செயற்கை நுாலிழை ஆடை ஏற்றுமதி கணிசமாக உயரும்


'ஏற்றுமதி 30சதவிகிதம் உயரும்'




திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் கூறுகையில்,''நாட்டின் மொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதியில், செயற்கை நுாலிழை ஆடைகள் பங்களிப்பு, 20 சதவீதமாக உள்ளது. மறு ஏற்றுமதி நிபந்தனையுடன் துணி இறக்குமதிக்கு வரிச்சலுகை அளிப்பது, இத்தகைய ஆடை ஏற்றுமதி அதிகரிக்க உதவியாக இருக்கும். இச்சலுகையை சரிவர பயன்படுத்தினால், செயற்கை நுாலிழை ஆடை ஏற்றுமதி, இந்தாண்டில் 30 சதவீதமாக உயர வாய்ப்புள்ளது,'' என்றார்.

Advertisement