டூ-வீலர் மீது கார் மோதி இரு தொழிலாளிகள் பலி

திருப்புவனம்: திருப்புவனம் அருகே பரமக்குடி --- மதுரை நான்கு வழிச்சாலையில், டூ-வீலர் மீது கார் மோதியதில் கட்டட தொழிலாளர்கள் இருவர் பலியாகினர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழராங்கியத்தைச் சேர்ந்தவர் ராம்பாண்டி, 50. மடப்புரத்தைச் சேர்ந்தவர் அய்யணன், 55; கட்டட தொழிலாளர்கள்.
இருவரும் வன்னிகோட்டை சென்று விட்டு, நேற்று காலை, 10:15 மணிக்கு, டூ-வீலரில் திருப்புவனம் வந்தனர்.
பரமக்குடி -- மதுரை நான்கு வழிச்சாலையில், தவளைக்குளம் விலக்கு அருகே வந்தபோது, இளையான்குடியில் இருந்து மதுரை சென்ற கார், டூ-வீலர் பின்பக்கம் மோதியதில், ஹெல்மெட் அணியாமல் டூ-வீலரில் வந்த இருவரும் துாக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
போலீசார், இளையான்குடியைச் சேர்ந்த கார் டிரைவர் ஜான்முகமது, 65, என்பவரிடம் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஒரு நிமிடத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் பாலைவனமாவதாக ஐ.நா எச்சரிக்கை
-
யார் முகத்தில முழிச்சேனோ?
-
புதுச்சேரியில் பா.ஜ., பிரமுகர் வெட்டிக்கொலை
-
காஷ்மீரில் சமூக ஆர்வலர் சுட்டுக்கொலை; பயங்கரவாதிகளுக்கு பாடம் புகட்ட பாதுகாப்பு படையினர் தீவிரம்
-
பயங்கரவாத தாக்குதலால் இந்தியர்களின் ரத்தம் கொதிப்பதை உணர முடிகிறது: பிரதமர் மோடி
-
போர்க்கப்பல்களை அழிக்கும் ஏவுகணை சோதனை; இந்திய கடற்படை அசத்தல்!
Advertisement
Advertisement