ஆண்டிற்கு 10 லட்சம் மர கன்றுகள் நடவு சென்னை மாநகராட்சி திட்டம்

மணலி:'சென்னை மாநகராட்சியில், ஆண்டிற்கு 10 லட்சம் மரக்கன்றுகள் நடத் திட்டமிடப்பட்டுள்ளது' என, பூங்கா துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மணலி மண்டலம், காமராஜர் சாலையில், 1.53 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும், நவீன எரியூட்டு தகன மேடையை, சென்னை மேயர் பிரியா, நேற்று காலை பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து, சுடுகாடு வளாகத்தில், 1.75 ஏக்கர் பரப்பளவில், 250 மகிழம்பூ, பூவரசம், புன்னை மரக் கன்றுகளை நட்டு வைத்தார்.
இதில், கமிஷனர் குமரகுருபரன், வட்டார துணை கமிஷனர்கள், மண்டல உதவி கமிஷனர்கள், மணலி மண்டல குழு தலைவர் ஏ.வி. ஆறுமுகம், பொறுப்பு உதவி கமிஷனர் தேவேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இது குறித்து, பூங்கா துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் :
சென்னை முழுதும், தினசரி மூன்று லட்சம் லிட்டர் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருளை மக்கள் பயன்படுகின்றனர். இதன் மூலம் உருவாகும் கார்பன் - டை - ஆக்சைடு, ஐந்து அணுகுண்டுகளுக்கு சமம். அதற்கு, மாற்று தீர்வு ஆக்சிஜன் அதிகளவில் உற்பத்தி செய்வதே. அதற்காக தான். மரக் கன்றுகள் நடப்படுகின்றன.
முதற்கட்டமாக, மணலியில், 250 மரக்கன்றுகள் நடப்பட்டன. திருவொற்றியூரில், 10 ஏக்கர் பரப்பளவில், 1,000 மரக்கன்றுகள் நடப்படவுள்ளது. அதன்படி, சென்னை மாநகராட்சி முழுவதும், ஆண்டுக்கு, 10 லட்சம் மரம் என, நான்கு ஆண்டுகளில், 40 லட்சம் மரங்கள் என்னும் இலக்கை அடைவதே குறிக்கோளாகும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில், குப்பை சேகரிப்பாளர்களுக்கான புதுவாழ்வு சிறப்பு முகாமை, மேயர் பிரியா துவங்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.கொடுங்கையூர், மீனாம்பாள் சாலை உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், மருத்துவ முகாம், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ், வீட்டுவசதி, திறன் பயிற்சி, வேலைவாய்ப்பு முகாம், வங்கி சேவைகள் உள்ளிட்ட அனைத்தும், ஒரே இடத்தில் வழங்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
.நிகழ்வில் மேயர் பிரியா பேசுகையில், ''கொடுங்கையூர் குப்பை கிடங்கில் உள்ள குப்பை, 30 ஆண்டுகள் பழமையானது. இவை அனைத்தையும், 'பயோ மைனிங்' செய்தால் காலதாமதமாகும். எனவே, தனித்தனியாக பிரித்து மின்சாரம், பயோ மைனிங், 'காஸ்' தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது,'' என்றார்.
மேலும்
-
ஒரு நிமிடத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் பாலைவனமாவதாக ஐ.நா எச்சரிக்கை
-
யார் முகத்தில முழிச்சேனோ?
-
புதுச்சேரியில் பா.ஜ., பிரமுகர் வெட்டிக்கொலை
-
காஷ்மீரில் சமூக ஆர்வலர் சுட்டுக்கொலை; பயங்கரவாதிகளுக்கு பாடம் புகட்ட பாதுகாப்பு படையினர் தீவிரம்
-
பயங்கரவாத தாக்குதலால் இந்தியர்களின் ரத்தம் கொதிப்பதை உணர முடிகிறது: பிரதமர் மோடி
-
போர்க்கப்பல்களை அழிக்கும் ஏவுகணை சோதனை; இந்திய கடற்படை அசத்தல்!