மாயமான ஆந்திர கப்பலின் சிக்னல் கிடைத்தது: இன்று பாம்பன் வருகை
ராமேஸ்வரம்: வங்க கடலில் சூறாவளியால் மாயமான ஆந்திர மாநில சரக்கு கப்பலின் தகவல் தொடர்பு கிடைத்த நிலையில் இன்று பாம்பன் கரைக்கு வர உள்ளது.
ஏப்., 20ல் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து கேப்டன் உள்ளிட்ட 12 மாலுமிகளுடன் கேரள மாநிலம் கொச்சி செல்ல புறப்பட்ட சரக்கு கப்பல் ஏப்., 24ல் பாம்பன் ரயில் பாலத்தை கடந்து செல்ல இருந்தது. ஆனால் ஏப்.,22ல் புதுச்சேரி வந்த இக்கப்பல் அங்கிருந்து புறப்பட்டு வங்க கடல் வழியாக பயணித்தது. திடீரென தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால்
கப்பல் எங்கு சென்றது. இதில் இருந்த 12 பேரின் கதி என்னவென்று தெரியாமல் கப்பல் உரிமையாளர், மாலுமி உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் 3 நாட்களுக்குப் பின் நேற்று காலை கப்பலில் இருந்து தகவல் தொடர்பு சிக்னல் கிடைத்தது.
வங்கக்கடலில் ஏற்பட்ட திடீர் சூறாவளியால் கப்பலை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டு வர தாமதமானது எனவும், இன்று (ஏப்., 27 ) காலை பாம்பன் கடற்கரைக்கு வந்து விடுவோம் என கப்பல் கேப்டன் தெரிவித்துள்ளார்.
மேலும்
-
யார் முகத்தில முழிச்சேனோ?
-
புதுச்சேரியில் பா.ஜ., பிரமுகர் வெட்டிக்கொலை
-
காஷ்மீரில் சமூக ஆர்வலர் சுட்டுக்கொலை; பயங்கரவாதிகளுக்கு பாடம் புகட்ட பாதுகாப்பு படையினர் தீவிரம்
-
பயங்கரவாத தாக்குதலால் இந்தியர்களின் ரத்தம் கொதிப்பதை உணர முடிகிறது: பிரதமர் மோடி
-
போர்க்கப்பல்களை அழிக்கும் ஏவுகணை சோதனை; இந்திய கடற்படை அசத்தல்!
-
2 நாட்களில் பயங்கரவாதிகள் 9 பேரின் வீடுகள் தரைமட்டம்; பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை