மனைவியை தீ வைத்து எரித்த கணவரும் படுகாயம்

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் அருகில் கணவர் தீ வைத்து எரித்ததில், மனைவி பலத்த தீக்காயமடைந்தார். அவர் கட்டிப்பிடித்ததால் கணவரும் காயமடைந்தார்.
கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த மேலப்பழஞ்சநல்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மனைவி சினேகா, 24; திருமணமாகி 10 மாதங்கள் ஆகிறது. தம்பதி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த விக்னேஷ், பெயின்ட் அடிக்க பயன்படுத்தப்படும் தின்னர் திரவத்தை, சினேகா மீது ஊற்றி தீ வைத்தார். அதிர்ச்சியடைந்த சினேகா, கணவரை கட்டிப்பிடித்தார். இதில், அவருக்கும் லேசான தீக்காயம் ஏற்பட்டது.
சினேகாவின் அலறல் கேட்டு, அக்கம்பக்கத்தினர் தம்பதியை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதில், விக்னேஷிற்கு அங்கேயே சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆபத்தான நிலையில், சினேகாவிற்கு தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
ஒரு நிமிடத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் பாலைவனமாவதாக ஐ.நா எச்சரிக்கை
-
யார் முகத்தில முழிச்சேனோ?
-
புதுச்சேரியில் பா.ஜ., பிரமுகர் வெட்டிக்கொலை
-
காஷ்மீரில் சமூக ஆர்வலர் சுட்டுக்கொலை; பயங்கரவாதிகளுக்கு பாடம் புகட்ட பாதுகாப்பு படையினர் தீவிரம்
-
பயங்கரவாத தாக்குதலால் இந்தியர்களின் ரத்தம் கொதிப்பதை உணர முடிகிறது: பிரதமர் மோடி
-
போர்க்கப்பல்களை அழிக்கும் ஏவுகணை சோதனை; இந்திய கடற்படை அசத்தல்!