கள்ளபிரான் கோயிலில் சித்திரை தேரோட்டம்

தூத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயிலில் நேற்று சித்திரை தேரோட்டம் நடந்தது.
கள்ளபிரான் கோயில் நவதிருப்பதி கோயில்களில் முதன்மையானது. ஆண்டுதோறும் நடக்கும் சித்திரை திருவிழா பிரசித்தி பெற்றது. இந்தாண்டுக்கான விழா ஏப்., 18ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழா நாட்களில் தினமும் கள்ளபிரான் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தார்.
ஏப்.,22ல் மங்களா சாசனமும், இரவில் கருட சேவையும் நடந்தது. 9ம் திருவிழாவான நேற்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம், திருமஞ்சனம் நடந்தது. காலை 7:00 மணிக்கு கள்ளபிரான் திருத்தேரில் எழுந்தருளினார்.
காலை 8: 45 மணிக்கு தேரோட்டம் துவங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தேர் சறுக்கு கட்டைகள் தடி பயன்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டதால் சிறிது நேரம் புறப்படுவதில் காலதாமதம் ஏற்பட்டது.
பின் தேரோட்டம் விமரிசையாக நடந்தது. ஸ்ரீவைகுண்டம் மற்றும் சுற்றியுள்ள மக்கள் பங்கேற்றனர்.
மேலும்
-
ஒரு நிமிடத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் பாலைவனமாவதாக ஐ.நா எச்சரிக்கை
-
யார் முகத்தில முழிச்சேனோ?
-
புதுச்சேரியில் பா.ஜ., பிரமுகர் வெட்டிக்கொலை
-
காஷ்மீரில் சமூக ஆர்வலர் சுட்டுக்கொலை; பயங்கரவாதிகளுக்கு பாடம் புகட்ட பாதுகாப்பு படையினர் தீவிரம்
-
பயங்கரவாத தாக்குதலால் இந்தியர்களின் ரத்தம் கொதிப்பதை உணர முடிகிறது: பிரதமர் மோடி
-
போர்க்கப்பல்களை அழிக்கும் ஏவுகணை சோதனை; இந்திய கடற்படை அசத்தல்!