நெல் கொள்முதல் நிலையம் அமைக்க எதிர்பார்ப்பு

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் நெல், கரும்பு அதிகளவில் பயிரிடப்பட்டு வருகின்றன.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வரை, ராணிப்பேட்டை மாவட்டம், அம்மூரில் செயல்பட்டு வரும் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு நெல் மூட்டைகளை விவசாயிகள் அனுப்பி வந்தனர். தற்போது ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் உள்ள நேரடி கொள்முதல் நிலையத்திற்கு அனுப்புகின்றனர்.

ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில், கொண்டாபுரம், வீரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நேரடி கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இங்கு செயல்படும் நெல் கொள்முதல் நிலையங்களுக்கு சீரான சாலை வசதி இல்லாததால் நெல் மூட்டைகளை ஏற்றி செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

ஒன்றிய தலைமையிடமான ஆர்.கே.பேட்டையில் நேரடி கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Advertisement