பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாவட்டம் நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

கலெக்டர் பிரதாப் பங்கேற்றார். இதில் பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு, துாய்மை பணி குறித்து உறுதி மொழி ஏற்றனர்.

மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலர் செல்வஇளவரசி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வெங்கட்ராமன், உதவி சுற்றுச்சூழல் அலுவலர் கயல்விழி, உதவி பொறியாளர் சபரி, திருவள்ளுர் நகராட்சி சுகாதார ஆய்வாளர் மோகன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement