விஜய் உடனான கூட்டணி கதவை மூடினேன்: சொல்கிறார் திருமா!

71

புதுச்சேரி: ''நான் நினைத்து இருந்தால் விஜய் உடன் போவதற்கு கூட கதவு திறந்து இருக்கிறது என்று சொல்லலாம். அந்த கதவையும் நான் மூடினேன்'' என விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் பேசினார்.

புதுச்சேரியில் நடந்த நிகழ்ச்சியில் திருமாவளவன் பேசியதாவது: ஒரே நேரத்தில் இரண்டு அணிகளோடு பேசி கொண்டு இருப்பது ராஜதந்திரம். நான் பா.ம.க.,வோடு சேரமாட்டேன். பா.ஜ.,வுடனும் சேர மாட்டேன். அந்த கட்சிகள் இடம்பெறும் கூட்டணியிலும் சேரமாட்டோம். இதனால் எந்த பாதிப்பு வந்தாலும் i don't care. அதை பற்றி நான் கவலைப்பட மாட்டேன். எனக்கு பதவி தான் முக்கியம் என்று சொன்னால், இப்படி எல்லாம் பேச முடியுமா?

புறக்கணித்தேன்



புதிதாக கட்சி தொடங்கி இருக்கிற நடிகர் விஜய் கூட, புத்தகம் வெளியிட்டு விழாவுக்கு வரும் படி, அழைப்பு விடுத்த போதும், அது தவறான ஊகத்தை உருவாக்கி விட கூடாது, நாம் இருக்கிற அணிக்கு குழப்பத்தை ஏற்படுத்திவிட கூடாது. அதன் மூலம் நாம் இருக்கும் அணி பலவீனம் அடைந்தால், பா.ஜ.,வுக்கு சாதகமான அரசியல் சூழல் மாறிவிடும் என்பதை எல்லாம் யூகித்து, அந்த விழாவையே புறக்கணித்தேன்.

கதவை மூடினேன்



அவர் (விஜய்) கூட சொன்னார், அண்ணன் வரவில்லை ஆனால் அவர் மனது நம்ம கூட இருக்கும் என்றார். நான் நினைத்து இருந்தால் விஜய் உடன் போவதற்கு கூட கதவு திறந்து இருக்கிறது என்று சொல்லலாம். அந்த கதவையும் நான் மூடினேன். பா.ஜ., தலைமையிலான அணி, அதையும் மூடினேன். அப்போதே நான் சொன்னேன். அ.தி.மு.க., பல தொகுதிகளை நமக்கு தருவதற்கு தயாராக இருக்கிறது.

ஆசைகளால்...!



கூட்டணி அரசுக்கு, ஆட்சிக்கும் உடன்பட தயாராக இருக்கிறது. போனால் துணை முதல்வர் பதவியை கோரலாம். கூடுதலாக 4, 5 அமைச்சர் பதவிகளை பெறலாம் என ஆசை காட்டிய சிலர் உண்டு. நீங்க நினைக்கும் மாதிரி சராசரி அரசியல்வாதி நான் அல்ல என்பதை பல சந்தர்ப்பங்களில் நான் உறுதிப்படுத்தி இருக்கிறேன். இந்த ஆசைகளால் என்னை வீழ்த்தி விட முடியாது. இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

Advertisement