கோவில் வாகன 'பார்க்கிங்' தளத்தில் கான்கிரீட் தரை அமைக்க கோரிக்கை

திருப்போரூர்:திருப்போரூரில் கந்தசுவாமி கோவிலுக்கு விடுமுறை, சுபமுகூர்த்தம், கோவில் விழா நாட்களில் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
அதேபோல், கோவில் நான்கு மாடவீதிகளில் உள்ள திருமண மண்டபங்களில் நடக்கும் திருமணங்களுக்கும், பொதுமக்கள் அதிக அளவில் வருகின்றனர்.
கோவில் மற்றும் திருமண மண்டபங்களுக்கு வரும் பக்தர்கள், சார் - பதிவாளர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நான்கு மாடவீதி சாலை ஓரங்களில் நிறுத்தி விட்டுச் செல்கின்றனர்.
இதனால், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.
எனவே, ஓரளவிற்கு வாகன போக்குவரத்து இடையூறை தவிர்க்க, கந்தசுவாமி கோவில் நிர்வாகம் சார்பில் தெற்கு மாடவீதியில் இடத்தை ஒதுக்கி, கட்டண வாகன 'பார்க்கிங்' வசதி ஏற்படுத்தப்பட்டது.
இதில், தற்போது உள்ளூர் மக்கள் மட்டுமின்றி கோவிலுக்கும் வரும் பக்தர்கள், சார் - பதிவாளர் அலுவலகம், திருமண மண்டபங்களுக்கு வரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை கட்டணம் செலுத்தி நிறுத்தி வருகின்றனர்.
வாகன பார்க்கிங் இடம் மண் தளமாக உள்ள நிலையில், மண் துாசு காற்றி பறப்பதுடன், சில இடங்களில் பள்ளம், மேடாகவும் உள்ளது.
மேலும், மழைக் காலங்களில் சேறும் சகதியுமாகவும் மாறி விடுகிறது.
இதனால், வாகனங்களை நிறுத்த மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே, கோவில் நிர்வாகம் இந்த பார்க்கிங் தளத்தில் கான்கிரீட் தரைதளம் அல்லது 'இன்டர்லாக்' கற்கள் அமைத்து சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும்
-
யார் முகத்தில முழிச்சேனோ?
-
புதுச்சேரியில் பா.ஜ., பிரமுகர் வெட்டிக்கொலை
-
காஷ்மீரில் சமூக ஆர்வலர் சுட்டுக்கொலை; பயங்கரவாதிகளுக்கு பாடம் புகட்ட பாதுகாப்பு படையினர் தீவிரம்
-
பயங்கரவாத தாக்குதலால் இந்தியர்களின் ரத்தம் கொதிப்பதை உணர முடிகிறது: பிரதமர் மோடி
-
போர்க்கப்பல்களை அழிக்கும் ஏவுகணை சோதனை; இந்திய கடற்படை அசத்தல்!
-
2 நாட்களில் பயங்கரவாதிகள் 9 பேரின் வீடுகள் தரைமட்டம்; பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை