ஏ.என். குப்பம் குளம் பராமரிக்க கோரிக்கை

கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டை அடுத்த ஏ.என்.குப்பம் கிராமத்தில் சிதிலமடைந்த நிலையில் ஜலகண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள கோவில் குளம், ஏ.என்.குப்பம் கிராமத்தின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது.

ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்க தவறியதால், குளத்தை சுற்றி புதர் சூழ்த்து உள்ளது. குளத்தை சுற்றியுள்ள புதர்களை அகற்றி, துாய்மையாக பராமரிக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement