பைக்குகள் நேருக்கு நேர் மோதல் ஒருவர் பலி; இருவர் படுகாயம்

கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி அருகே, இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிய விபத்தில், மூவர் துாக்கி வீசப்பட்டனர். இதில் ஒருவர் பலியானார். இருவர் படுகாயமடைந்தனர்.
கூடுவாஞ்சேரி அடுத்த தங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன், 39; தனியார் துறை ஊழியர்.
இவர், நேற்று முன்தினம் இரவு 9:15 மணியளவில், தன் 'ஹீரோ பேஷன்' இரு சக்கர வாகனத்தில், கூடுவாஞ்சேரியிலிருந்து காயரம்பேடு நோக்கிச் சென்றார்.
அதே நேரம், ஊனமாஞ்சேரி, பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த தாமோதரன், 48, என்பவர், 'டி.வி.எஸ்., ஸ்டார் சிட்டி' வாகனத்தை ஓட்டியபடி, கூடுவாஞ்சேரி நோக்கி வந்தார்.
இவரது வாகனத்தில் பின்னால், தங்கதுரை, 65, என்ற முதியவர் அமர்ந்திருந்தார்.
அப்போது, நெல்லிக்குப்பம் சாலை, மூலக்கழனி, தனம் சூப்பர் மார்க்கெட் அருகே வரும் போது, இரண்டு இரு சக்கர வாகனங்களும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதின.
இதில், மூவரும் துாக்கி வீசப்பட்டனர். இச்சம்பவத்தில், 'ஹீரோ பேஷன்' வாகனத்தை ஓட்டி வந்த கார்த்திகேயனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அங்கிருந்தோர் அவரை மீட்டு, அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு, மருத்துவர்கள் பரிசோதனையில், அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரிந்தது.
'டி.வி.எஸ்., ஸ்டார் சிட்டி' வாகனத்தை ஓட்டிவந்த தாமோதரனும், பின்னால் அமர்ந்து வந்த தங்கதுரையும் படுகாயமடைந்தனர். அவர்கள் இருவரும், எஸ்.ஆர்.எம்., மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து, பொத்தேரியில் உள்ள தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மேலும்
-
யார் முகத்தில முழிச்சேனோ?
-
புதுச்சேரியில் பா.ஜ., பிரமுகர் வெட்டிக்கொலை
-
காஷ்மீரில் சமூக ஆர்வலர் சுட்டுக்கொலை; பயங்கரவாதிகளுக்கு பாடம் புகட்ட பாதுகாப்பு படையினர் தீவிரம்
-
பயங்கரவாத தாக்குதலால் இந்தியர்களின் ரத்தம் கொதிப்பதை உணர முடிகிறது: பிரதமர் மோடி
-
போர்க்கப்பல்களை அழிக்கும் ஏவுகணை சோதனை; இந்திய கடற்படை அசத்தல்!
-
2 நாட்களில் பயங்கரவாதிகள் 9 பேரின் வீடுகள் தரைமட்டம்; பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை