கிணற்றில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு
மறைமலைநகர்:கூடுவாஞ்சேரி அடுத்த கீரப்பாக்கம் ஊராட்சிகளுக்கு உட்பட்ட சின்ன அருங்கால் கிராமத்தில் உள்ள பயன்பாடு இல்லாத விவசாய கிணற்றில், 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக, நேற்று முன்தினம் மாலை, கூடுவாஞ்சேரி போலீசாருக்கு பொது மக்கள் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்குச் சென்ற கூடுவாஞ்சேரி போலீசார் மற்றும் மறைமலைநகர் தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
போலீசார் வழக்கு பதிந்து இறந்த நபர் யார்? தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணமா என்ற கோணங்களில் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
யார் முகத்தில முழிச்சேனோ?
-
புதுச்சேரியில் பா.ஜ., பிரமுகர் வெட்டிக்கொலை
-
காஷ்மீரில் சமூக ஆர்வலர் சுட்டுக்கொலை; பயங்கரவாதிகளுக்கு பாடம் புகட்ட பாதுகாப்பு படையினர் தீவிரம்
-
பயங்கரவாத தாக்குதலால் இந்தியர்களின் ரத்தம் கொதிப்பதை உணர முடிகிறது: பிரதமர் மோடி
-
போர்க்கப்பல்களை அழிக்கும் ஏவுகணை சோதனை; இந்திய கடற்படை அசத்தல்!
-
2 நாட்களில் பயங்கரவாதிகள் 9 பேரின் வீடுகள் தரைமட்டம்; பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை
Advertisement
Advertisement