தேசிய வில் வித்தை போட்டி துவக்கம்

ராசிபுரம்: தமிழ்நாடு வெற்று வில் சங்கம் சார்பில், ராசிபுரம் ஸ்ரீவித்யா மந்திர் பள்ளியில், நேற்று தேசிய அளவிலான இரண்டு நாள் வில் வித்தை போட்டி தொடங்கியது. இப்போட்டி, இரண்டு நாட்கள் நடக்கிறது.


இதில், மஹாராஷ்டிரா, ஆந்திரா, தமிழகம் ஆகிய, மூன்று மாநி-லங்களில் இருந்து, 100 வில்வித்தை வீரர்,- வீராங்கனையர் கலந்து-கொள்கின்றனர். 12, 17 வயது மற்றும் ஓபன் என, மூன்று பிரி-வுகளில் போட்டி நடக்கிறது. போட்டிகளை, வித்யா மந்திர் பள்ளி தலைவர் நடராஜன், செயலாளர் சுந்தரராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில், 12 வயதிற்குட்பட்டவர்களுக்கு, 10 மீட்டர், 17 வயதிற்-குட்பட்டவர்களுக்கு, 20 மீட்டர், திறந்த நிலை பிரிவில் பங்கேற்-பவர்களுக்கு, 30 மீட்டர் ஆகிய தொலைவுக்கு அம்புகள் எய்தும் வகையில் போட்டிகள் நடந்தன. இறுதி போட்டி, இன்று நடக்-கிறது. பரிசளிப்பு விழா, மாலை, 4:00 மணிக்கு நடக்கிறது.
ஓபன் பிரிவில் வெற்றி பெறும் வில்வித்தை வீரர்-, வீராங்க-னையர், தாய்லாந்து தலைநகர், பாங்காக்கில், 2025 ஜூலை, 3, 4, 5, 6 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள ஆசிய வெற்று வில் சாம்பியன்ஷிப்-2025 போட்டியில் பங்கேற்பர். ஏற்பாடுகளை, தமிழ்நாடு வெற்று வில் சங்க பொதுச்செயலாளர் கேசவன் செய்தி-ருந்தார்.

Advertisement