விசாரிக்க சென்ற ஜேடர்பாளையம் எஸ்.ஐ.,க்கு மண்டை உடைப்பு

ப.வேலுார்: ப.வேலுார் அருகே, ஜேடர்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ.,யாக பணிபுரிந்து வருபவர் தனபால், 57; இவர், நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு பணியில் ஈடுபட்டிருந்தார்.


அப்போது வந்த போன் அழைப்பில், 'குடும்ப தகராறு காரண-மாக வாலிபர் ஒருவர் அடாவடியில் ஈடுபட்டு வருகிறார்' புகார் வந்தது. இதுகுறித்து விசாரிக்க, சம்பவ இடமான சிறுகிணத்துபா-ளையம் கிராமத்திற்கு, எஸ்.ஐ., தனபால் சென்றார். அப்போது, அங்கு குடிபோதையில் இருந்த சிறுகிணத்துபாளையத்தை சேர்ந்த சுரேஷ், 35, எஸ்.ஐ., தனபாலிடம் வாக்குவாதத்தில் ஈடு-பட்டார்.இதையடுத்து, சுரேஷை, ஜேடர்பாளையம் போலீஸ் ஸ்டேஷ-னுக்கு கொண்டு செல்ல போலீசார் முயன்றனார். அப்போது, அருகில் கிடந்த கல்லை எடுத்த சுரேஷ், எஸ்.ஐ., தனபால் மண்-டையை உடைத்தார். இதில், காயமடைந்த எஸ்.ஐ., தனபால், நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். ஜேடர்பாளையம் போலீசார் சுரேஷை கைது செய்தனர்.

Advertisement