மெட்டாலா பயணிகளுக்கு தண்ணீர் பந்தல் திறப்பு
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை ஒன்றியம், மெட்டாலா பகுதியில் காய்கறி மண்டிகள் அதிகளவு உள்ளன. இதனால், விவசாயிகள், பொது-மக்கள் அதிகளவு வந்து செல்கின்றனர்.
தற்போது, கோடை வெயில் அதிகரித்து இருப்பதால் பயணிகள், விவசாயிகள் மிகவும் சிரமப்படுகின்றன். மெட்டாலாவில் பய-ணிகள் நிற்பதற்கு போதுமான அளவு பெரிய நிழற்கூடம் இல்லை.
இந்நிலையில், தி.மு.க., சார்பில் மெட்டாலாவில் தண்ணீர்பந்தல், நேற்று திறக்கப்பட்டது. மாவட்ட மத்திய கூட்டுறவு சங்க தலைவர் ராஜேஸ்குமார் எம்.பி., தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். மேலும், பயணிகளுக்கு குளிர்பாணம், நீர்மோர், தர்பூ-சணி, வெள்ளரிக்காய் உள்ளிட்ட பழங்களை வழங்கினார். அப்-போது, பந்தலில் குடிநீர் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என, அறிவுரை வழங்கினார். மாவட்ட இளைஞரணி நிர்வாகி சுரேஷ், ஜெகதீசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காஷ்மீரில் சமூக ஆர்வலர் சுட்டுக்கொலை; பயங்கரவாதிகளுக்கு பாடம் புகட்ட பாதுகாப்பு படையினர் தீவிரம்
-
பயங்கரவாத தாக்குதலால் இந்தியர்களின் ரத்தம் கொதிப்பதை உணர முடிகிறது: பிரதமர் மோடி
-
போர்க்கப்பல்களை அழிக்கும் ஏவுகணை சோதனை; இந்திய கடற்படை அசத்தல்!
-
2 நாட்களில் பயங்கரவாதிகள் 9 பேரின் வீடுகள் தரைமட்டம்; பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை
-
விஜய் உடனான கூட்டணி கதவை மூடினேன்: சொல்கிறார் திருமா!
-
ஈரான் துறைமுகத்தில் வெடி விபத்து; பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
Advertisement
Advertisement