'ஸ்டார் டென்னிஸ் அகாடமி'யில் சேர்க்கை வீரர்களுக்கு நாளை தகுதித்தேர்வு போட்டி

நாமக்கல்: 'நாமக்கல் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின், ஸ்டார் டென்னிஸ் அகாடமியில் சேர, நாளை தகுதித்தேர்வு போட்டி நடக்கிறது' என, கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்-டத்தில், டென்னிஸ் விளையாட்டில், வீரர், வீராங்கனையர் மகத்-தான வெற்றி பெற, விளையாட்டு திறன் மேம்பாடு மற்றும் அங்-கீகார மையம், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம், 'ஸ்டார் அகாடமி' செயல்படுத்தப்பட உள்ளது.டென்னிஸ் விளையாட்டிற்கான ஸ்டார் அகாடமியில், 12 முதல், 21 வயது வரை உள்ள பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதற்கான தேர்வுப்போட்டி, நாளை காலை, 7:00 மணிக்கு, மாவட்ட விளையாட்டரங்கில் நடக்கிறது. போட்டியில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு, ஒரு மாதத்தில், 25 நாட்கள் தொடர் பயிற்சி வழங்கப்படும். பயிற்சியின் போது, சிற்றுண்டி, பயிற்சி உபகரணங்கள் மற்றும் விளையாட்டு சீருடைகள் வழங்கப்படும். மாநில மற்றும் தேசிய போட்டிகளில் கலந்துகொள்ள பயண செலவு அரசு மூலம் வழங்கப்படும்.
தேர்வு போட்டியில் கலந்துகொள்ள வரும் மாணவ, மாணவியர் ஆதார் கார்டு நகல், பிறப்புச்சான்று நகல், அடையாள அட்டை நகல் ஆகியவற்றை கொண்டுவர வேண்டும். மேலும் விபரங்க-ளுக்கு, 7401703492 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்-ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement