பணம் பறித்த ரவுடி குண்டாஸில் கைது



கரூர்: கரூர் மாவட்டம், செட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குப்-புசாமி, 55; இவர் கடந்த, 4 ல் நத்தமேடு சரவணா நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.


அப்போது, நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் பகுதியை சேர்ந்த ரவுடி தனசேகரன், 33, குப்புசாமியிடம் இருந்து, 500 ரூபாயை பறித்து கொண்டு ஓடி விட்டார்.குப்புசாமி கொடுத்த புகாரின் படி, தனசேகரனை கரூர் டவுன் போலீசார் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
தனசேகரன் மீது, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வழிப்பறி, மிரட்டுவது உள்ளிட்ட, 30 க்கும் மேற்பட்ட வழக்-குகள் நிலுவையில் உள்ளன.
இதனால், ரவுடி தனசேகரனை, குண்டர் சட்ட த்தின் கீழ் கைது செய்ய, எஸ்.பி., பெரோஸ் கான் அப்துல்லா, கலெக்டர் தங்கவே-லுவுக்கு பரிந்துரை செய்தார்.
இதையடுத்து, நேற்று கலெக்டர் தங்கவேல், ரவுடி தனசேக-ரனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
பிறகு, திருச்சி மத்திய சிறையில் உள்ள தனசேகரனுக்கு, குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற் கான நகலை, கரூர் டவுன் போலீசார் வழங்கினர்.

Advertisement