கொளுத்தும் கோடை வெயில் சுற்றுலா இடங்கள் 'வெறிச்'

இந்தியாவில் சுற்றுலா பயணிகள் விரும்பும் முதல் இடமாக புதுச்சேரி உள்ளது. ஆனால் கோடை வெயிலின் தாக்கம் சுட்டெரித்து வரும் நிலையில் புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்து விட்டது.கடும் வெயில் காரணமாக சுற்றுலா தலங்கள் வெறிசோடி காணப்படுகின்றன. எப்போதும் பரப்பரப்பாக இருக்கும் கடற்கரை சாலை சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்து நேற்று மதியம் வெறிச்சோடி காணப்பட்டது. பாரதி பூங்காவிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாக காணப்பட்டது.

சுட்டெரிக்கும், கோடை வெயில் காரணமாக உள்ளூர் மக்களும் மதியம் வெளியே செல்லாமல் வீடுகளில் முடங்கியுள்ளனர். மாலை நேரத்தில் வழக்கம்போல் பொழுது போக்கு இடங்களில் குடும்பத்துடன் பொழுதை கழிக்கின்றனர்.

Advertisement