பணி ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில், பணி ஓய்வு பெறும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் நலச்சங்கம் சார்பில் பாராட்டு விழா நேற்று நடந்தது.


பனமரத்துப்பட்டியில் நடந்த விழாவில், வட்டார கல்வி அலுவலர் கிரிஜா, ஓய்வு பெறும் மேச்சேரியம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியர் முகம்மது ஹபீப் நஜ்ஜார், என்.மேட்டூர் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் சண்முகம் ஆகியோரை பாராட்டி பரிசு வழங்கினார்.
வட்டார வள மைய மேற்பார்வையாளர் அசோக்ராஜா, ஆசிரியர் நலச்சங்க பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள், வாழ்த்தினர்.

Advertisement