ரன்யா, தருணுக்கு ஜாமின் மறுப்பு

பெங்களூரு : தங்கம் கடத்திய வழக்கில் நடிகை ரன்யா ராவ், அவரது முன்னாள் காதலன் தருணுக்கு ஜாமின் வழங்க, உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

துபாயில் இருந்து பெங்களூருக்கு 12 கோடி ரூபாய் தங்கம் கடத்திய வழக்கில், நடிகை ரன்யா ராவ் கடந்த மாதம் 3ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், முன்னாள் காதலனும், நடிகருமான தருண் கொண்டாரு ராஜு, பல்லாரி நகைக்கடை உரிமையாளர் ஷாகில் ஜெயின் கைதாகினர். மூன்று பேரும் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

ஜாமின் கேட்டு பொருளாதார குற்றப்பிரிவு, செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரன்யா, தருண் மனுத்தாக்கல் செய்தனர். இரண்டு நீதிமன்றத்திலும் கிடைக்கவில்லை. இதனால் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். மனுக்களை நீதிபதி விஸ்வஜித் ஷெட்டி விசாரித்து வந்தார்.

அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் நேற்று நீதிபதி விஸ்வஜித் ஷெட்டி, வருவாய் புலனாய்வு தரப்பு வாதங்களை ஏற்றுக்கொண்டு, ரன்யா, தருணுக்கு ஜாமின் வழங்க மறுத்துவிட்டார்.

ரன்யா மீது காபிபோசா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவாகி இருப்பதால், ஓராண்டுக்கு அவருக்கு ஜாமின் கிடைக்காது என்றும் கூறப்படுகிறது.

Advertisement