புதுச்சேரி நகர பகுதியில் போலீசார் தீவிர ரோந்து

புதுச்சேரி : புதுச்சேரி நகரப்பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப் இன்ஸ்பெக்டர்கள் சந்திரசேகரன், ராஜன் ஆகியோர் தலைமையில் போலீசார் நேற்று இரவு புதுச்சேரி நகர பகுதிகள், கடற்கரை சாலை, அண்ணா சாலை, புஸ்சி வீதி, சுப்பையா சாலை உள்ளிட்ட இடங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் இரவு திடீர் சோதனையில் ஈடுப்பட்டதால் பரபரப்பு நிலவியது. இதேபோல் பெரியக்டைகடை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீசார் நேற்று இரவு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

Advertisement