இன்று பெங்களூரில் மாரத்தான் போட்டி

பெங்களூரு : பெங்களூரில் இன்று 'டி.சி.எஸ்., வோர்ல்ட் 10 கே - 2025' என்ற உலக அளவிலான மாரத்தான் போட்டி நடக்கிறது. இதில், பிரபல தடகள வீரர்கள், வீராங்கனைகள், பொது மக்கள் என பலரும் கலந்து கொள்கின்றனர்.

இப்போட்டி இன்று காலை 6:10 மணிக்கு கப்பன் சாலையில் உள்ள ஆர்.எஸ்.ஏ.ஓ.ஐ., கிரிக்கெட் மைதானத்தில் துவங்கி, பீல்டு மார்ஷல் மானெக் ஷா பரேடு மைதானத்தில் முடிவடைகிறது.

இப்போட்டி, காலையில் துவங்க உள்ளதால், வீரர்கள், பார்வையாளர்களின் வசதிக்காக, நகரில் பல வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

நிறுத்த தடை



போர் நினைவு சந்திப்பு, அண்ணாசாமி முதலியார் சாலை, செயின்ட் ஜான்ஸ் சாலை, செயின்ட் ஜான்ஸ் சர்ச் சாலை, அசாய் சாலை, வீலர்ஸ் சாலை, அஜந்தா சாலை, காமராஜ் சாலை, கஸ்துார்பா சாலையில் ஹட்சன் சதுக்கம் முதல் குயின்ஸ் சதுக்கம் வரை; எம்.ஜி., சாலையில் குயின்ஸ் சதுக்கம் முதல் வெப்ஸ் சதுக்கம் வரை; டிக்கென்சன் சாலையில் வெப்ஸ் சந்திப்பிலிருந்து ஹலசூரு சாலை வரை; கப்பன் சாலையில் மணிப்பால் மையத்திலிருந்து சி.டி.ஓ., சதுக்கம் வரை; சென்ட்ரல் தெரு, குயின்ஸ் சாலையில் பாலேகுந்த்ரி சதுக்கத்திலிருந்து குயின்ஸ் சதுக்கம் வரை; ராஜ் பவன் சாலையில் சி.டி.ஓ., சதுக்கத்திலிருந்து ராஜ் பவன் சந்திப்பு வரை; காலாட்படை சாலையில் ராஜ் பவன் முதல் போக்குவரத்து போலீசார் தலைமையகம் வரை; அம்பேத்கர் சாலையில் கே.ஆர்., சதுக்கம் முதல் பாலேகுந்த்ரி சதுக்கம் வரை; கப்பன் பூங்கா உள்ளே மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகள்; வைதேகி மருத்துவமனை சாலையில் சித்தலிங்கய்யா சதுக்கம் முதல் ஆர்.ஆர்.எம்.ஆர்., சதுக்கம் வரை; ஆர்.ஆர்.எம்.ஆர்., சாலரையில் ரிச்மெண்ட் சந்திப்பு முதல் ஹட்சன் சதுக்கம் வரை சாலைகளில் வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை செய்யப்பட்டு உள்ளது.

அதே சமயம், மாரத்தானில் பங்கு பெறுவோர் தங்கள் வாகனங்களை, யு.பி.,சிட்டி, சுதந்திர பூங்கா எம்.எல்.சி.பி., பார்க்கிங் லாட், கருடா மால், 1 எம்.ஜி., லிடோ மால், எம்.எஸ்., கட்டடம் ஆகிய இடங்களில் வாகனங்களை நிறுத்தி கொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

செல்ல தடை



ஸ்ரீ சதுக்கம் - செயின்ட் ஜான்ஸ் சாலை; அண்ணாசாமி முதலியார் சாலை - ரிசர்வ் வங்கி; சி.டி.ஓ., சந்திப்பு - மணிப்பால் மையம்; டிக்கென்சன் சாலை - வீரப்பிள்ளை தெரு; கப்பன் சாலை - டிக்கென்சன் சந்திப்பு; மணிப்பால் மையம் - வெப்ஸ் சந்திப்பு,; ஹலசூரு சாலை - டோபி காட்,; பாஸ்கரன் சாலை - காமதேனு சந்திப்பு; குருத்வாரா சந்திப்பு - டோபி காட்; ஹட்சன் சந்திப்பு - சித்தலிங்கய்யா சதுக்கம்; காமராஜ் சாலை, போர் நினைவு சந்திப்பு; பேகம் மஹால் சந்திப்பு; கங்காதர் ரெட்டி சாலை; கஸ்துார்பா சாலை; சித்தலிங்கய்யா சதுக்கம்; குயின்ஸ் சாலை; அம்பேத்கர் சாலை; கப்பன் பூங்கா; எம்.ஜி., சாலை ஆகிய சாலைகளில் இன்று காலை 5:00 மணி முதல் காலை 10:00 மணி வரை வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

கனரக வாகனங்கள்



கனரக சரக்கு வாகனங்கள் செல்வதற்கு மாற்றுப்பாதை வழங்கப்பட்டு உள்ளன. மைசூரு சாலையிலிருந்து எம்.ஜி., சாலை அல்லது பழைய மெட்ராஸ் சாலை வழியாக நகருக்குள் வரும் வாகனங்கள், ஹட்சன் சதுக்கத்தில் வலதுபுறமாக திரும்பி தேவாங்கர் சந்திப்பு, மிஷன் சாலை, ரிச்மெண்ட் மேம்பாலம், ரெசிடென்சி சாலை, கேஷ் பார்மசி, ஓபரா சந்திப்பு, மேயோஹால், கமிஷனரேட் சாலை, கருடா மால், ெஹாஸ்மட் மருத்துவமனை வழியாக செல்ல வேண்டும்.

பல்லாரி சாலை, மேக்ரி சாலையிலிருந்து நகருக்குள் வரும் வாகனங்கள் பழைய உதயா டிவி அலுவலக சந்திப்பு வழியாக நிருபதுங்கா சாலை, ஹட்சன் சாலைக்கு செல்லலாம்.

பழைய மெட்ராஸ் சாலை, வர்த்துார் சாலை வழியாக நகருக்குள் வரும் வாகனங்கள் சுரஞ்சன் தாஸ் சாலை வழியாக பழைய விமான நிலைய சாலைக்கு செல்லலாம்.

ஹலசூரு ஏரிக்கரை சாலை வழியாக வரும் வாகனங்கள் செயின்ட் ஜான்ஸ் சாலை வழியாக கன்டோன்மென்ட் ரயில் நிலையம், ஜெயமஹால் சாலை வழியாக மேக்ரி சதுக்கம் வரை செல்லலாம்.

Advertisement