படத்திறப்பு விழா

திண்டிவனம் : திண்டிவனத்தில், மணிலா நகர் அரிமா சங்க நிர்வாகியின் படத்திறப்பு விழா நடந்தது.

மணிலா நகர் அரிமா சங்க கேபினட் உறுப்பினர் கேபிஎன்.சுரேஷ் கடந்த 4ம் தேதி உடல்நலம் பாதித்து இறந்தார். அவரது படத்திறப்பு விழா மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது.

திண்டிவனம் ஆர்யாஸ் ஓட்டலில், பன்னாட்டு லயன்ஸ் சங்கம், மணிலா நகர் அரிமா சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, ராஜா கொடி வணக்கம் செலுத்தினார். அரசு வழக்கறிஞர் செந்தில்குமார் பேசினார்.

முன்னாள் பன்னாட்டு இயக்குநர் சம்பத், முன்னாள் மாவட்ட ஆளுநர் தனபால் ஆகியோர் சுரேஷ் படத்தை திறந்து வைத்து, அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ., மாசிலாமணி, டாக்டர்கள் பரசுராமன், ராஜேந்திரன், தி.மு.க., நகர செயலாளர் கண்ணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரமேஷ், செயற்குழு உறுப்பினர் சின்னசாமி, தொழில் அதிபர்கள் சுப்ராயலு, பங்கஜ்குமார், ராம்டெக்ஸ் வெங்கடேசன், ஆர்யாஸ் ராஜ்குமார், அரிமா சங்கம் கல்கண்டு சுந்தரம், சிவக்குமார், வேல்முருகன், சர்வீஸ் லயன்ஸ் டிரஸ்ட் சங்க தலைவர் ஆனந்த் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், வியாபார சங்க நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியை நல்லாசிரியர் பிரான்சிஸ் தொகுத்து வழங்கினார்.

Advertisement