பஹல்காம் தாக்குதல் மோசமானது; அமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டி

வாஷிங்டன் : பஹல்காம் தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று அளித்த பேட்டியில், ''இந்த தாக்குதல் மோசமான ஒன்று. இந்தியாவும், பாகிஸ்தானும் தங்கள் வழியில் இந்த பிரச்னையை விரைவில் தீர்த்துக்கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது,'' என்றார்.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி சுற்றுலா பயணியர் 26 பேர் பலியாகினர். தாக்குதல் நடத்தியவர்கள் பாகிஸ்தான் ராணுவத்தால் பயிற்சி அளிக்கப்பட்டவர்கள் என்ற தகவல் வெளியானது.

இதனால் பாகிஸ்தானுக்கு எதிராக சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகளை இந்தியா எடுத்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பிடம், பஹல்காம் தாக்குதல் குறித்து நேற்று செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு டிரம்ப் அளித்த பதிலில், “இரு நாடுகளுக்கும் நான் நெருக்கமானவன். காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் மோசமான ஒன்று.

காஷ்மீர் பிரச்னையால் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பல ஆண்டுகளாக பதற்றம் உள்ளது. அதை இரு நாடுகளும் தங்கள் வழியில் தீர்ப்பர் என நம்புகிறேன்,” என்றார்.

Advertisement