பள்ளி மாணவி தற்கொலை

பண்ருட்டி : பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பண்ருட்டி அடுத்த வீரப்பெருமாநல்லுாரைச் சேர்ந்தவர் அய்யப்பன் மகள் காவியா,17; அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். கடந்த 22ம் தேதி பெற்றோர் திட்டியதால் மனமுடைந்து வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.

குடும்பத்தினர் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement