கொங்கலாபுரத்தில் வாறுகால் பணி தாமதம்

சிவகாசி : சிவகாசி அருகே கொங்கலாபுரத்தில் வாறுகால் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் கழிவுநீர் வெளியேற வழியின்றி ரோட்டில் ஓடி வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தினை ஏற்படுகிறது.
சிவகாசி அருகே கொங்கலாபுரம் வெம்பக்கோட்டை ரோட்டில் கழிவுநீர் வெளியேறுவதற்காக ஆறு மாதங்களுக்கு முன்பு வாறுகால் கட்டும் பணி துவங்கியது.
இந்த வாறுகால் கட்டப்பட்டால் இதன் வழியே வருகின்ற கழிவு நீர் டி.மானகசேரி ஊராட்சிக்கு உட்பட்ட கொங்கலாபுரம் கண்மாயில் கலந்து விடும். இதனால் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படும் என கொங்கலாபுரம், பேர் நாயக்கன்பட்டி பகுதி மக்கள் வாறுகால் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
தொடர்ந்து அதிகாரிகள் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வாறுகால் கட்டப்பட்டு அதன் வழியே வருகின்ற கழிவுநீர் கண்மாயில் கலக்காமல் வேறு பகுதியில் விடப்படும் என உறுதி அளித்திருந்தனர்.
அதன்பின்பு குறிப்பிட்ட துாரம் மட்டுமே வாறுகால் கட்டப்பட்டு பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.இதனால் கழிவு நீர் முழுவதும் ரோட்டில் ஓடுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் ஏற்படுவதோடு சுகாதாரக் கேடும் ஏற்படுகிறது.
மேலும் அருகில் உள்ள தெருக்களிலும் கழிவு நீர் ஓடி குடியிருப்பு வாசிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. மெயின் ரோட்டில் கழிவு நீர் ஓடுவதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே வாறுகால் கட்டும் பணியை முழுமையாக முடித்து கழிவுநீர் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும்
-
கூப்பிட ஆள் இல்லாததால் தனியாக புலம்பும் விஜய்; அமைச்சர் கோவி. செழியன் விமர்சனம்
-
கஞ்சா வழக்கில் மலையாள சினிமா இயக்குநர்கள் கைது
-
கனடாவில் பயங்கரவாத தாக்குதல்; இசை விழாவில் அதிவேக கார் புகுந்ததில் பலர் பலி
-
டில்லியில் 5 ஆயிரம் பாகிஸ்தானியர்கள்; அடையாளம் கண்டது உளவுத்துறை!
-
விவசாயிகள் தொழில் முனைவோராக மாறணும்; கோவையில் துணை ஜனாதிபதி பேச்சு
-
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும்: நயினார் நாகேந்திரன் பேட்டி