கூட்டுக்கொள்ளை வழக்கு: தலைமறைவாக இருந்த வருமான வரி ஊழியர் டில்லியில் கைது

புதுடில்லி:கூட்டுக்கொள்ளை வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியாக கருதப்படும் வருமான வரித்துறை ஊழியரை டில்லியில் போலீசார் கைது செய்தனர்.
கடந்த 2023 ஆம் ஆண்டு தீபக் காஷ்யப், வருமான வரித் துறை ஊழியர், கூட்டுக் கொள்ளை குற்றங்களில் சம்பந்தப்பட்டதாக குற்றச்சாட்டுக்கு உள்ளானார். மேலும் அவர், ஒரு வருடத்திற்கும் மேலாக தப்பித்து வந்ததைத் தொடர்ந்து, கடைசியாக இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு குறித்து மூத்த போலீஸ் அதிகாரி கூறியதாவது:
இந்த சம்பவம் கடந்த 2023 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 1 ஆம் தேதி நடந்தது. டில்லியில் உள்ள ஜனக்புரியில் உள்ள ஒரு தொழிலதிபர் வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் என்று கூறி, ஒரு பெண் உள்பட 7 பேர் தனது வீட்டிற்கு வலுக்கட்டாயமாக நுழைந்ததாக அந்த தொழிலதிபர் புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் நடத்திய விசாரணையில், வருமான வரித்துறை ஊழியரான தீபக் காஷ்யப், நில ஒப்பந்தத்தில் இருந்து வருமானத்தை மறைத்ததாக குற்றம் சாட்டி, தொழிலதிபரை, அவரது குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ளாமல் இருக்க வற்புறுத்தி உள்ளார். இந்த காட்சிகள் சி.சி.டி.வி., காட்சிகள் உறுதிப்படுத்தின. அதில் ஒரு எஸ்.யு.வி., காரை பலர் நபர்கள் பயன்படுத்தியது தெரியவந்தது.
வருமான வரித்துறை ஊழியரான தீபக் காஷ்யப், தனது அதிகாரப்பூர்வ பதவியை பயன்படுத்தி, கூட்டாளிகளை அரசு அதிகாரிகள் போல ஆள்மாறாட்டம் செய்ய பயன்படுத்தி, பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டார். சட்ட விரோத செயல்களை செயல்படுத்திய தீபக் காஷ்யப் முதலில் அப்போதே கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமின் பெற்று, கைது செய்யப்படுவதிலிருந்து தப்பி வந்தார். இறுதியில் இந்த வழக்கு 2023 நவம்பரில் துவாரகா கோர்ட்டில் தீபக் காஷ்யப் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் தேடப்பட்டு வந்த அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கொண்டு விசாரணை நடைபெறுகிறது.
இவ்வாறு மூத்த போலீஸ் அதிகாரி கூறினார்.
மேலும்
-
காற்றில் பறக்கும் நீதிமன்ற உத்தரவு பல இடங்களில் பறக்கும் கட்சி கொடிகள்
-
ரூ.2.50 கோடியில் குடிநீர் குழாய் பதிப்பு பணி துவங்கியதால் மதுரவாயலில் நிம்மதி
-
மொபைல் போன் பறித்த வாலிபர் கைது
-
கத்தியை காட்டி அச்சுறுத்தல் ரவுடிகள் கைது
-
203 கட்டுமான திட்டங்களுக்கு நான்கு மாதங்களில் ஒப்புதல்
-
சித்திரை பிரம்மோத்சவம் தேர் பராமரிப்பு தீவிரம்