இந்தியா - பாக்., இடையே பதற்றம்: உன்னிப்பாக கவனிக்கறது சீனா

5

பெய்ஜிங்: இந்தியா - பாகிஸ்தான் இடையிலான சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருவதாக சீனா கூறியுள்ளது.


காஷ்மீரில் நடந்த தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து உள்ளது.இந்நிலையில், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ உடன் பாகிஸ்தான் அமைச்சர் முகமது இஷக் தர் ஆலோசனை நடத்தினார்.


அப்போது சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ கூறியதாக அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது: இந்தியா - பாகிஸ்தான் இடையில் நிலவும் சூழ்நிலையை சீனா கண்காணித்து வருகிறது. இரு தரப்பும் கட்டுபாட்டுடன் நடப்பதுடன், பதற்றத்தை தணிக்க இணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement