65 ஆண்டு கால பழமையான வெடிகுண்டை அழித்தது இந்திய ராணுவம்

2

இட்டாநகர்: அருணாச்சல பிரதேசம் அருகே கண்டெடுக்கப்பட்ட 65 ஆண்டு கால பழமை வாய்ந்த வெடிகுண்டை இந்திய ராணுவத்தினர் பத்திரமாக வெடிக்கச் செய்து அழித்தனர்.



அருணாச்சல பிரதேசத்தின் ஜிமுதுங் வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைக்கும் பணியின் போது, வெடிக்காத நிலையில் மிகவும் பழமையான வெடிகுண்டு ஒன்று கிடந்துள்ளது. இது கூம்பு வடிவில் 75/24 மி.மீட்டர் அளவு கொண்டதாகும். 1962ம் ஆண்டு இந்தியா - சீனா இடையிலான போரின் போது, வீசப்பட்ட குண்டு என்று சொல்லப்படுகிறது.


இந்த குண்டு எந்த நேரம் வேண்டுமானாலும் வெடித்து சிதறலாம் என்று கிராம மக்களிடையே அச்சம் இருந்து வந்துள்ளது. எனவே, இந்த வெடிகுண்டை அழிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.


இந்த நிலையில், 65 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த வெடிகுண்டை, இந்திய ராணுவத்தின் சிறப்பு குழுவினர் பாதுகாப்பாக வெடிக்கச் செய்து அழித்தனர்.

Advertisement