மின்னல் தாக்கியதில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: ஒரு அறை, வாகனம் சேதம்

சாத்துார்: விருதுநகர் மாவட்டம் சாத்துார் அருகே கீழ ஒட்டம்பட்டியில் பட்டாசு ஆலை இருப்பு அறையின் மீது மின்னல் தாக்கியதில் பட்டாசுகள் வெடித்து சிதறின. அந்த அறை, அருகில் நின்ற சரக்கு வாகனம் சேதமடைந்தது.
சிவகாசியைச்சேர்ந்தவர் மகாராஜன். இவருக்கு சொந்தமான அய்யம்மாள் பட்டாசு ஆலை கீழ ஒட்டம்பட்டியில் உள்ளது. இந்த ஆலையில் நேற்று விடுமுறைநாள் என்பதால் பணி நடைபெறவில்லை.இந்த நிலையில் சாத்துார், சுற்றுப்பகுதியில் நேற்று மதியம் சூறாவளியுடன் இடி மின்னலுடன் மழை பெய்யத் துவங்கியது. பட்டாசு ஆலையில் இருப்பு அறையில் மாலை 4:00 மணிக்கு மின்னல் தாக்கியது.
அறையில் தயாரித்து வைக்கப்பட்டிருந்த பேன்சி ரக வெடிகள் வெடித்து சிதறின. அறை முற்றிலும் சேதமடைந்தது. அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு வாகனம் தீப்பற்றி எரிந்து கருகியது. பணியாளர்கள் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. சாத்துார் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
கிராமத் தலைவர் குத்திக்கொலை
-
சாலையில் சிதறிய நெல் மூடைகள் வேதனையில் தவித்த பொதுமக்கள்
-
கடல் அட்டைகள் பறிமுதல்; ராமேஸ்வரத்தில் இருவர் கைது
-
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்; அமெரிக்கா, பிரான்சில் இந்திய வம்சாவளியினர் ஆர்ப்பாட்டம்
-
அடுத்த தலாய் லாமா யார்; ஜூலையில் அறிவிக்க வாய்ப்பு; உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு
-
எல்லையில் தொடரும் துப்பாக்கிச் சண்டை; அத்துமீறும் பாக்., ராணுவத்துக்கு இந்தியா தக்க பதிலடி