எல்லையில் தொடரும் துப்பாக்கிச் சண்டை; அத்துமீறும் பாக்., ராணுவத்துக்கு இந்தியா தக்க பதிலடி

பூஞ்ச்: ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் 26 பேரை பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.
இதனிடையே, எல்லை தாண்டியதாக இந்திய பாதுகாப்பு படை வீரரை பாகிஸ்தான் ராணுவத்தினர் சிறைபிடித்துள்ளனர். அடுத்தடுத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையிலும், அவரை விடுவிக்க பாகிஸ்தான் மறுத்து வருகிறது. இதனால், இருநாடுகளிடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், போர் நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து 4வது நாளாக நள்ளிரவில், ஜம்மு காஷ்மீர் பகுதியில் உள்ள இந்திய நிலைகளின் மீது தாக்குதல் நடததியுள்ளது. குப்வாரா மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் உள்ள எல்லைப் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டிற்கு, இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது.
ஏற்கனவே, இரு நாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த அத்துமீறல் மேலும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
வாசகர் கருத்து (3)
Rajah - Colombo,இந்தியா
28 ஏப்,2025 - 14:11 Report Abuse

0
0
Reply
ramesh - chennai,இந்தியா
28 ஏப்,2025 - 09:58 Report Abuse

0
0
Reply
Ramanujan - ,
28 ஏப்,2025 - 09:00 Report Abuse

0
0
Reply
மேலும்
-
வரலாறு காணாத மின்தடையால் ஸ்தம்பித்த ஸ்பெயின், போர்ச்சுகல், பிரான்ஸ்; ரயில், விமான சேவை முற்றிலும் நிறுத்தம்
-
காஷ்மீரில் நடமாடிய அந்த 4 பேர்: சல்லடை போட்டு தேடும் பாதுகாப்பு படை
-
சுப்மன் கில், பட்லர் அரைசதம்: ராஜஸ்தான் அணிக்கு 210 ரன்கள் இலக்கு
-
டிரம்ப் மிரட்டலுக்கு இடையே துவங்கியது கனடா பார்லி., தேர்தல்
-
சிமென்ட் குடோனில் ரூ.8.15 கோடி மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்: மும்பையில் இருவர் கைது
-
பொதுக்கூட்ட மேடையில் போலீஸ் அதிகாரியை அடிக்க பாய்ந்த முதல்வர்
Advertisement
Advertisement