தேசப்பற்றுடன் பேச வேண்டும்: வலியுறுத்துகிறார் நயினார் நாகேந்திரன்

திண்டுக்கல்லில் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகிறார். இத்திட்டத்திற்கு காங்., கூட்டணி ஆட்சியில் தான் அனுமதி அளிக்கப்பட்டது. எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல் என துணை முதல்வர் உதயநிதி கூறியதில் தவறு இல்லை. ஆனால் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என சொல்வது மட்டும் முக்கியமல்ல. அதை கிடைக்கும் வகையில் செயல்படுத்த வேண்டும்.
இலை மேல் தாமரை மலரும் என்பதற்கு இரு கட்சிகளும் இணைந்து வெற்றி பெறும் என்பதே அர்த்தம். கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி அறிவிப்பர்.தி.மு.க., மக்களுக்கு எதிராக அனைத்து விஷயங்களையும் செய்து வருகிறது. இந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.
பஹல்காம் தாக்குதல் சம்பவத்தில் அனைத்து தலைவர்களும் தேசப்பற்றுடன் பேச வேண்டும். 'டிவி'விளம்பரத்திற்காக கருத்துக்களை தெரிவிக்கக்கூடாது.பாகிஸ்தான் துண்டாடப்பட வேண்டும். பிரதமர் மோடிக்கு எங்களின் முழு ஆதரவு என காங்., ஆளும் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார். இவரை போன்ற தலைவர்களுக்கு எனது வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
மேலும்
-
கிராமத் தலைவர் குத்திக்கொலை
-
சாலையில் சிதறிய நெல் மூடைகள் வேதனையில் தவித்த பொதுமக்கள்
-
கடல் அட்டைகள் பறிமுதல்; ராமேஸ்வரத்தில் இருவர் கைது
-
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்; அமெரிக்கா, பிரான்சில் இந்திய வம்சாவளியினர் ஆர்ப்பாட்டம்
-
அடுத்த தலாய் லாமா யார்; ஜூலையில் அறிவிக்க வாய்ப்பு; உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு
-
எல்லையில் தொடரும் துப்பாக்கிச் சண்டை; அத்துமீறும் பாக்., ராணுவத்துக்கு இந்தியா தக்க பதிலடி