சேதமடைந்துள்ள கை 'பம்ப்' சீரமைக்க புதுார்வாசிகள் கோரிக்கை

சித்தாமூர்:புதுார் கிராமத்தில் சேதமடைந்துள்ள கை 'பம்ப்'பை சீரமைக்க வேண்டும் என, கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சித்தாமூர் அருகே முகுந்தகிரி ஊராட்சிக்கு உட்பட்ட புதுார் கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
கூடுதல் நீர் ஆதாரத்திற்காக, கரிக்கந்தாங்கல் கிராமத்திற்குச் செல்லும் சாலை ஓரத்தில், 2017ம் ஆண்டு, 14வது மானியக் குழு நிதியில் கை பம்ப் அமைக்கப்பட்டது.
பொதுமக்கள் இந்த கை பம்ப் தண்ணீரை துணி துவைப்பதற்கும், குளிப்பதற்கும், பாத்திரங்கள் சுத்தம் செய்வது போன்ற வீட்டு உபயோகத்திற்கும் பயன்படுத்தி வந்தனர்.
நாளடைவில், முறையான பராமரிப்பு இல்லாமல், கை பம்ப்பின் அடித்தளம் சேதமடைந்ததால், குடம் வைத்து தண்ணீர் பிடிக்க முடியாமல் இப்பகுதிவாசிகள் சிரமப்படுகின்றனர்.
எனவே, ஊராட்சி நிர்வாகத்தினர் கவனித்து, சேதமடைந்துள்ள கை பம்ப்பை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.
மேலும்
-
பயணியின் ஐபேட் வெடிக்கும் அபாயம்; லுப்தான்சா விமானம் அவசரமாக தரை இறக்கம்
-
கிராமத் தலைவர் குத்திக்கொலை
-
சாலையில் சிதறிய நெல் மூடைகள் வேதனையில் தவித்த பொதுமக்கள்
-
கடல் அட்டைகள் பறிமுதல்; ராமேஸ்வரத்தில் இருவர் கைது
-
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்; அமெரிக்கா, பிரான்சில் இந்திய வம்சாவளியினர் ஆர்ப்பாட்டம்
-
அடுத்த தலாய் லாமா யார்; ஜூலையில் அறிவிக்க வாய்ப்பு; உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு