பாகிஸ்தானில் 54 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

6

பெஷாவர் : பாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தான் மாவட்டம், ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது.


எல்லையில் உள்ள பிபாக் கர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் அத்துமீறி ஊடுருவினர். அப்போது, பாதுகாப்பு படையினரை நோக்கி, அவர்கள் துப்பாக்கியால் சுடத் துவங்கினர்.


இதையடுத்து, அவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில், 54 பேர் பலியாகினர். இதைத்தொடர்ந்து, சம்பவம் நிகழ்ந்த பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்
.

இதற்கிடையே, இறந்த நபர்களை அடையாளம் காணும் பணியில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டனர். இதில், கொல்லப்பட்டவர்கள் அனைவரும் ஆப்கானிஸ்தானில் இயங்கும் தெஹ்ரிக் - இ - தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

Advertisement