நடைபாதையில் முட்செடிகள் விபத்தில் சிக்கும் பாதசாரிகள்

ஏனாத்துார்:சென்னை - பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலை, ஏனாத்துார் செல்லும் சாலையோரம் கான்கிரீட் மழைநீர் வடிகால்வாயின்மீது நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. கனரக வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இச்சாலையில், பாதசாரிகள் விபத்தில் சிக்குவதை தவிர்க்க நடைபாதையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், முறையான பராமரிப்பு இல்லாததால், நடைபாதையை மறைக்கும் வகையில், சீமை கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. இதனால், பாசாரிகள் நடைபாதையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. கனரக வாகன போக்குவரத்து நிறைந்த சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகள், விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.

எனவே, ஏனாத்துாரில், நடைபாதையை மறைக்கும் வகையில் வளர்ந்துள்ள சீமை கருவேல முட்செடிகளை அகற்ற நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement