மருத்துவமனையில் தயாளு அம்மாள் அனுமதி

சென்னை : முதல்வர் ஸ்டாலினின் தாயார் தாய் அம்மாள், உடல்நலக் குறைவால், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவியும், முதல்வர் ஸ்டாலினின் தாயுமான தயாளு அம்மாள், 92; சென்னை கோபாலபுரம் வீட்டில் வசித்து வருகிறார்.
வயது முதிர்வால் அவ்வப்போது ஏற்படும் உடல்நலக் குறைவுக்காக, மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்று, வீடு திரும்புவது வழக்கம். கடந்த மாதம் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இந்நிலையில், நேற்று அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை, மருத்துவக் குழுவினர் கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கிராமத் தலைவர் குத்திக்கொலை
-
சாலையில் சிதறிய நெல் மூடைகள் வேதனையில் தவித்த பொதுமக்கள்
-
கடல் அட்டைகள் பறிமுதல்; ராமேஸ்வரத்தில் இருவர் கைது
-
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்; அமெரிக்கா, பிரான்சில் இந்திய வம்சாவளியினர் ஆர்ப்பாட்டம்
-
அடுத்த தலாய் லாமா யார்; ஜூலையில் அறிவிக்க வாய்ப்பு; உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு
-
எல்லையில் தொடரும் துப்பாக்கிச் சண்டை; அத்துமீறும் பாக்., ராணுவத்துக்கு இந்தியா தக்க பதிலடி
Advertisement
Advertisement