சொத்துக்காக தந்தையை கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை
சென்னை:சென்னை, ஈக்காட்டுத்தாங்கல் காந்தி நகரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவருக்கும், இவரது மகன் ஜெபரிஷ், 23, என்பவருக்கும், இடையே சொத்து பிரச்னை இருந்து வந்தது.
இந்த விவகாரத்தில் எந்தவித சமரசத்துக்கும் வராததால், தந்தை மீது ஜெபரிஷுக்கு கடும் கோபம் இருந்து வந்தது. சொத்தை விட்டு கொடுக்காத தந்தையை தீர்த்துக்கட்ட, அவர் முடிவு செய்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 2023 ஜூலை 14ல் பாலசுப்பிரமணியன் வீட்டில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது ஜெபரிஷ், தந்தை என்றும் பாராமல் கிரிக்கெட் மட்டை, இரும்பு கம்பியால் அவரை அடித்து கொலை செய்தார்.
இது குறித்து கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெபரிஷை கைது செய்தனர். இவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரது தாய் சுப்புலட்சுமி மீதும், போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை, சென்னை 19வது கூடுதல் கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆர்.ராஜ்குமார் முன் நடந்தது.
போலீசார் தரப்பில் கூடுதல் குற்றவியல் அரசு வழக்கறிஞர் எஸ். தனசேகரன் ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, ஜெபரிஷ் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளது எனக் கூறி, அவருக்கு ஆயுள் தண்டனை, 2,000 ரூபாய் அபாராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
அதேநேரம், சுப்புலட்சுமி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, அவரை விடுதலை செய்து, நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும்
-
கிராமத் தலைவர் குத்திக்கொலை
-
சாலையில் சிதறிய நெல் மூடைகள் வேதனையில் தவித்த பொதுமக்கள்
-
கடல் அட்டைகள் பறிமுதல்; ராமேஸ்வரத்தில் இருவர் கைது
-
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்; அமெரிக்கா, பிரான்சில் இந்திய வம்சாவளியினர் ஆர்ப்பாட்டம்
-
அடுத்த தலாய் லாமா யார்; ஜூலையில் அறிவிக்க வாய்ப்பு; உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு
-
எல்லையில் தொடரும் துப்பாக்கிச் சண்டை; அத்துமீறும் பாக்., ராணுவத்துக்கு இந்தியா தக்க பதிலடி