குப்பை கழிவால் பொலிவிழக்கும் பழவேற்காடு கடற்கரை பகுதி

பழவேற்காடு:வங்காள விரிகுடா கடற்கரை பகுதியில் பழவேற்காடு மீனவபகுதி அமைந்து உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தின், சுற்றுலாத்தளமாக திகழ்கிறது.
விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் சுற்றுலாப்பயணியர் அதிகளவில் வந்து, இங்குள்ள கடற்கரை அழகை ரசித்தும், கடலில் குளித்தும் விளையாடுகின்றனர்.
சென்னை மெரினா போன்ற, நீண்ட அழகிய கடற்கரை பகுதியாக இது இருக்கிறது. அதே சமயம், கடற்கரை பகுதியை பொலிவிழக்க செய்யும் வகையில், இங்கு குப்பை கழிவுகள் கொட்டி குவிக்கப்படுகின்றன.
சுற்றுலா பயணியர் விட்டு செல்லும் கழிவுகள் அவ்வப்போது அகற்றப்படுவதில்லை. ஊராட்சி நிர்வாகங்களும் கடற்கரையை குப்பை மேடாக மாற்றி வருகின்றன.
கடற்கரை பகுதியில் குவிந்து கிடக்கும் கழிவுகள், சுற்றுலாப்பயணியரை முகம் சுளிக்க வைக்கிறது. பலத்த காற்று வீசும்போது, குப்பையில் உள்ள பிளாஸ்டிக் கவர்கள் கடலில் சேர்கிறது. இது கடலில் உள்ள உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்துகின்றன.
கடற்கரை பகுதியில் குப்பை கழிவுகள் கொட்டி குவிக்கப்படுவதை தவிர்க்கவும், துாய்மையாக வைத்திருக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்க விடுத்து உள்ளனர்
மேலும்
-
கிராமத் தலைவர் குத்திக்கொலை
-
சாலையில் சிதறிய நெல் மூடைகள் வேதனையில் தவித்த பொதுமக்கள்
-
கடல் அட்டைகள் பறிமுதல்; ராமேஸ்வரத்தில் இருவர் கைது
-
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்; அமெரிக்கா, பிரான்சில் இந்திய வம்சாவளியினர் ஆர்ப்பாட்டம்
-
அடுத்த தலாய் லாமா யார்; ஜூலையில் அறிவிக்க வாய்ப்பு; உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு
-
எல்லையில் தொடரும் துப்பாக்கிச் சண்டை; அத்துமீறும் பாக்., ராணுவத்துக்கு இந்தியா தக்க பதிலடி